Friday 10th of May 2024 03:13:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் 4 கிராமங்களில் விளையாட்டு மைதானங்களுக்கு அடிக்கல்!

கிளிநொச்சியில் 4 கிராமங்களில் விளையாட்டு மைதானங்களுக்கு அடிக்கல்!


கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 'கிராமத்துக்கு ஒரு விளையாட்டு மைதானம்" திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 332 விளையாட்டு மைதானங்களுக்கு அடிக்கல் நாட்டும் செயற்பாட்டில், கிளிநொச்சியில் நான்கு கிராம மைதானங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் அடிக்கல் நாட்டப்பட்டது.

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மலையாளபுரம் புதியபாரதி விளையாட்டுக்கழகம், கண்டாவளையில் கல்மடுநகர் விளையாட்டுக் கழகம், பச்சிளைப்பள்ளியில் அரசர்கேணி பூதவராஜர் விளையாட்டுக்கழகம், பூநகரியில் முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகம் என்பவற்றின் மைதானங்களுக்கே அடிக்கல் நாட்டப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவரது இணைப்பாளரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி பிரதேசசபை உறுப்பினர்கள வசந்தரூபன், சிவநேசன், பிரதீபன் ஆகியோர் மைதானங்களுக்கான அடிக்கற்களை நாட்டினர்.

மாவட்டச் செயலாளர் றூபாவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் மாலதி, பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் தலைமையில், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அநுரகாந்தனின் ஒருங்கிணைப்பில், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் தவேந்திரன் மற்றும் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்களின் கூட்டுழைப்பில் நிகழ்வுகள் நடந்தன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE